ஆகஸ்ட் 2ம் தேதி ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம்?

மும்பை: ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம், ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில், அமீரக நாட்டில், இந்தாண்டின் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐபிஎல் 13வது சீசனை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளின் நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில், தங்களின் பதவிகாலம் முடிந்த நிலையிலும், புதிய நிர்வாகிகள் யாரும் தேர்வுசெய்யப்படாத காரணத்தால், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி