பாட்னா: சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தனது மகன் சிராக் பஸ்வான் மேற்கொள்ளும் எந்த முடிவையும் ஆதரிப்பேன் என்றுள்ளார் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான்.

தற்போது, உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் ராம்விலாஸ் பஸ்வான்.

“பணியில் எந்தத் தொய்வும் இருக்கவில்லை. இந்த கொரோனா பரவல் நேரத்தில், உணவு அமைச்சராக, நாட்டிலுள்ள அனைவருக்கும் உணவு கிடைக்கும் வேலைகளை நான் செய்துகொண்டுள்ளேன்” என்றுள்ளார் ராம்விலாஸ் பஸ்வான்.

“இந்த நேரத்தில் எனது மகன் சிராக் பஸ்வான் என்னுடன் இருந்து, எனக்கு அனைத்து வகையிலும் உதவி வருகிறார். என்னை கவனித்துக் கொள்வதுடன், கட்சிப் பணிகளையும் பொறுப்பேற்றுக் கொள்கிறார் அவர். எனவே, அவர் மேற்கொள்ளும் எந்த முடிவையும் நான் ஆதரிப்பேன். தனது இளைய மற்றும் கூரிய சிந்தையால், அவர் பீகார் மாநிலத்தை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்வார் என்று நம்புகிறேன்” என்றார் அவர்.

தற்போதைய நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன், பஸ்வான் கட்சிக்கு பல விஷயங்களிலும் மோதல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.