மும்பை: இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக, பிசிசிஐ அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெண்கள் கிரிக்கெட் அணி என்று நீண்டகாலமாக தனியாக செயல்பட்டு வந்தாலும்கூட, ஆண்கள் கிரிக்கெட் அணிக்குத்தான் அத்தனை மவுசும்!
அதேசமயம், சமீபத்திய ஆண்டுகளில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு வந்த காரணத்தால், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனாலும், இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எந்த குறிப்பிட்ட முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்ற புலம்பல் எழுந்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் புறக்கணிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரிக்கு பின்பான காலத்தில், பெண்கள் அணிக்கென்று இன்னும் தேர்வாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. குறைகளைச் சொல்வதற்கென்று பிசிசிஐ அமைப்பிலும் தனி அதிகாரிகள் இல்லை.
இந்நிலையில், “இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்கள் கிரிக்கெட் பின்னோக்கிச் சென்று கொண்டுள்ளது” என்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.