இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம்  உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

New Delhi, Sep 08 (ANI): Prime Minister, Narendra Modi addressing at the inauguration of the Patrika Gate in Jaipur, through video conferencing in New Delhi on Tuesday. (ANI Photo)

நாடு முழுவதும் தற்போதுதான் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில், தசரா பண்டிகை மற்றும் நவராத்திரி பண்டிகைகள்  காரணமாக பொதுமக்கள் கோவில்களிலும், வணிக நிறுவனங்களிலும் கூடுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம்  உரையாற்ற உள்ளதாக பிரதமர் அறிவித்து உள்ளார்.  அப்போது,  நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக கூறியிருக்கும் மோடி,  என்ன கூறப்போகிறார் என்பது குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.