ஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா?

விண்ணில் உள்ள நட்சத்திரங்களில் ஒன்றான  திருவாதிரை நட்சத்திரம் (Betelgeuse star)  சமீப காலமாக ஒளிமங்கி வருவதாகவும், அதன் வடிவம் பெருத்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக, அந்த நட்சத்திரம் வெடித்து சிதறும் வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்களையும் தெரிவித்து உள்ளனர்….  இது பொதுமக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

அவ்வப்போது விண்ணில் இருந்து விண்கல்கள் பூமியை தாக்குவதாக செய்தி வருவதையும், அதன் காரணமாக மக்களிடையே பரபரப்பு நிலவுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே 1980 க்கு முந்தய  காலத்தில் ஸ்கைலாப் என்றொரு  ராக்கெட்  பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய கடலோரம் மோதப் போவதாகவும், அதனால் மனித இனமே இருக்காது என்று செய்திகள் பரவி மக்களிடையே பீதியை கிளப்பின…

பலர் நாம்தான் சாகப்போகிறோமே என்று…. தாங்கள் வளர்த்த ஆடு கோழிகளை பலியிட்டு சமைத்து உண்டு அதகளப்படுத்தி னார்…ஆனால், இறுதியில் அது புஷ்வானமாகிப் போனது… இந்த நிலையில் தற்போது திருவாதிரை வெடித்து சிதறப்போகிறது என்று மக்களிடையே பீதிகள் ஏற்பட்டு உள்ளது…

திருவாதிரை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம். அதுபோல வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் 10ம் இடத்தில் திருவாதிரை நட்சத்திரம் உள்ளது.  இந்த நட்சத்திரத்தை குறிப்பிட்ட நாட்களில் அதிகாலை நேரத்தில் கண்ணால் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நட்சத்திரமானது, தற்கால வானியல்படி  ஓரியன் என்ற விண்மீன் குழுவில் கணக்கிடப்படுகிறது. இதற்கு வழக்கத்தில் உள்ள  பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும். இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது மிதுனராசி யில் கணக்கிடப்படுகிறது.

தற்போது இந்த நட்சத்திரத்தின் ஆயுள்காலம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது…

விண்வெளியில் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் திருவாதிரையும் ஒன்று… இவைகளுக்கும் மனிதர்களைப் போலவே ஆயுட்காலம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதன் உருவ மாற்றம், அதன் ஆயுட்காலத்தை குறைத்து வருவதாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இதுபோன்ற நட்சத்திரங்கள் தங்களது இறுதிக்காலத்தின்போது, உடல்பெருத்து, ஒளி மங்கி காட்சியளிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அதன்படி தற்போது,  திருவாதிரை நட்சத்திரமும், ஒளிமங்கி, உடல்பெருத்து இருப்பதாக கூறப்படுகிறது…  இதுபோன்ற நட்சத்திரங்கள்  சூரியனைப் போலபல மடங்கு பெரியதும்,  சுருங்கி விரியும் தன்மையும் கொண்டது. பிரகாசமாக இரவு நேரங்களில் காட்சி தரும் விண்மீன்களில், சுமார் 1 லட்சம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுக்கு சூப்பர் நோவா என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது திருவாதிரை நட்சத்திரத்துக்கு சூப்பர் நோவா ஆகும் அறிகுறிகள் தெரிவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  இதுகுறித்து ஆய்வு செய்து வரும், கலிஃபோர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வாளர் சரஃபினா நான்ஸ், தற்போதைய நிலையில், திருவாதிரை நட்சத்திரம்  தமது வழக்கமான பிரகாசத்தில் அது 36 சதவீதத்தை இழந்துள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளார். இதன் காரணமாக இந்த நட்சத்திரம் வெடித்து சிதறும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

சரி… இந்த  நட்சத்திரம் சுமார் 724 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது… இது வெடித்து சிதறினால், பூமிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

சூரியனை விட பலஆயிரம் மடங்கு பெரியதான திருவாதிரை

ஒளியாண்டு என்பது விண்வெளியில் தூரத்தைக் கணக்கிடும் ஒரு நடைமுறை. விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இது மாறாதது. இந்த வேகத்தில் ஓராண்டு பயணம் செய்தால் ஒளி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுதான் ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். இதன்படி பார்த்தால் 724 ஆண்டுகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் சென்று சேரும் தூரத்தில் இருக்கிறது திருவாதிரை.

திருவாதிரை ஸ்டார்  வெடித்து சிதறினால், பூமிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து, இந்திய மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான வெங்கடேஷ்வரன் கூறியதாவது,

பிரகாசனமான விண்மீன்களில் ஒன்றான திருவாதிரை தனது 10வது இடத்தை விட்டு நகன்று 24வது இடத்துக்கு சென்று விட்டது… அது தன் பிரகாசத்தை இழந்து வருகிறது என்பதை உறுதி செய்துள்ளார்…

“சுருங்கி விரியும் தன்மையுடைய திருவாதிரை நட்சத்திரம் உலகுக்கு ஒளி வழங்கி வரும் சூரிய்னை விட  550 முதல் 920 மடங்கு பெரியது மட்டுமின்றி, சூரியனைப் போல 15 மடங்கு அதிக நிறையுடையதும்ட  5 ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலை வெளியிடக் கூடியது.  ஒரு விண்மீன் வீங்கிப் பெருக்கும்போது, அது மொத்தமாக வெளியிடும் ஆற்றல் குறையாது. ஆனால், அதன் பிரகாசம் குறையும். கடந்த ஓராண்டாக திருவாதிரை மங்கி, வீங்கிப் பெருத்து வருகிறது . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிதாக இது வீங்கிப் பெருக்கும்போது, இதன் புறப்பரப்பு, உட்கருவின் ஈர்ப்பு விசைக்கு அடங்காமல்போய் உடைந்து சிதறும். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது சில ஆண்டுகளிலும் நடக்கலாம். 500 ஆண்டுகளோ, பல்லாயிரம் ஆண்டுகளோ ஆகலாம் என்று தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்பு 1987-ம் ஆண்டு ஒரு சூப்பர் நோவா நிகழ்வு நடைபெற்றது. அதை  புவியில் இருந்து உணர முடிந்தது. இப்போது இந்த நிகழ்வு நடந்தால், இதனை கண்காணிக்க உலகில் அண்டார்டிகா, ஜப்பான் போன்ற இடங்களில்தான் ஆய்வகங்கள் உள்ளன, இந்தியாவில் ஆய்வகங்கள் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த விண்மீன் வெடித்து சிதறினால், பூமிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தவர், அதைக் காண 724 ஆண்டுகள் தேவை என்று கூறியவர், “இப்போது திருவாதிரை வெடித்து சூப்பர் நோவா நிகழ்வு நடந்தால், அதை பூமியை வந்தடைய 724 ஆண்டுகள் ஆகும்…. என்றும், தற்போது நமது கண்ணுக்கு அதுபோல ஏதாவது நிகழ்வுகள் நடைபெற்றது தெரிய வந்தால், அது ஏற்கனவே 724 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வாகவே இருக்கும் என்றும் விளக்கினார்.

பொதுமக்களே பயம் வேண்டாம்….