‘’ டாஸ்மாக்’’ கடைகள் திறந்திருக்கும்  நேரத்தில் மாறுதல்?

லகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கால் தமிழகம் முழுவதும் ‘’ டாஸ்மாக்’ மதுபான கடைகள் மூடப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, கடந்த மே மாதம் முதல் படிப்படியாக ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன.


இறுதியாக சென்னை மற்றும் புறநகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் இதுவரை திறக்கப்படவில்லை.இந்த பார்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் திறக்க ’டாஸ்மாக்’ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பார்கள் திறக்கப்படுவதால், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்திலும் மாறுதல் செய்யப்படுகிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டன. தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்படும் கடைகள் இரவு 8 மணி வரை செயல்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்து 200 டாஸ்மாக் கடைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.