சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் முடிவு வருவதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டும் வழக்கம்போல சென்னை உள்பட சில பகுதிகளில், தேவையான மழை பொழியாமல் ஏமாற்றி உள்ள  நிலையில், வரும் நாட்களில் சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற பயம் இப்போதே மக்களிடையே எழத் தொடங்கி உள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர்,.தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில்தான் அதிக அளவு மழை கிடைக்கும்.

ஆனால் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழையால் அதிக சேதாரம் ஏற்படவில்லை என்று தெரிவித்தவர், வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது என்றும், தமிழக்ததில் கடல்காற்று ஜனவரி முதல் வாரம் வரை நீடித்தாலும் வடகிழக்கு  மழையை கணக்கிடும்போது, 31-ந்தேதிவரைதான் கணக்கு, அது முடிய இன்னும் 3 நாட்கள்தான் உள்ளது என்றார்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 147 சதவீதம் வரை பெய்ததால் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் கடலுக்குள் சென்றது என்றவர், பின்னர் அக்டோபர் 16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கம்போல மழை பெய்தாலும் ஒட்டு மொத்த தமிழகத்தை கணக்கிடும்போது இயல்பைவிட 3 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. ஆனால் சென்னையில் 17 சதவீதம் மழை குறைந்துள்ளது.

இதேபோல் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாய உற்பத்தி விளைச்சல் அதிகமாகும்.

சென்னையில் தான் 17 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. ஆனாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீர் நிலைகளில் அதிகமாகவே தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் ஏற்கனவே நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால், வரும் நாட்களில் சென்னை மக்கள் மீண்டுமொரு தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.