பெரிய ஸ்கோரை எட்டுமா சென்‍னை அணி?

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், 16 ஓவர்கள் கடந்த நிலையில், 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில், சென்னை அணி 133 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்ததால், சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரர் கெய்க்வாட் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். 13 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்தார்.

டூ பிளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். மொயின் அலி 20 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அம்பாதி ராயுடு 17 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

எந்த வீரரும் அதிரடி காட்டாததால், சென்னை அணி, 16 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. தற்போது ஜடேஜாவும், தோனியும் களத்தில் உள்ளனர்.