சீனா சென்ற வடகொரிய அதிபர் – அணு ஆயுத சோதனை நிறுத்தப்படுமா ?

அணு ஆயுத சோதனையை நிறுத்துவது குறித்து வடகொரியா அதிபரும் மற்றும் சீனா ஜனாபதியும் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இருநாட்டுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்பிற்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் என வடகொரியாவில் உள்ள ஊடகங்களில் தெரிவித்தன.
kim- ji meeting
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் சீனாவின் ஜனாபதி ஜி ஜிங்பின் இரு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது அணுஆயுத சோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்காக இருவரும் கருத்துக்களை பரிமாறி கொண்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. கடந்த வாரம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பை கொரிய அதிபர் கிம் சந்தித்து பேசியதை நினைவு கூர்ந்த ஜி அணு ஆயுத சோதனைக்கு முடிவு கொண்டுவர கருத்து தெரிவித்ததாக கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் புதிய எதிர்காலத்தை உருவாக்கவும், உண்மையன அமைதியை ஏற்படுத்தவும் சீனா உதவும் என வடகொரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சீனாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள கொரிய அதிபரின் இரண்டு நாள் பயணம் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. சிங்கப்பூரில் டிரம்புடன் நடைபெற்ற உச்சிமாநாட்டை தொடர்ந்து கிம் சீனா சென்றுள்ளார். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனையை தவிர்க்க கிம் நடவடிக்கை எடுத்து வருவதை இந்த பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிம் உடன் சீன ஜனாபதி பெய்ஜிங்கில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் சீன ஊடங்கங்களில் வெளியிடப்பட்டன.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை நிறுத்தி வைக்க கடந்த செவ்வாய் கிழமை முடிவெடுத்துள்ளன. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. இந்த முடிவு குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் காங் கியூங், “ கூட்டு ராணுவப்பயிற்சியை நிறுத்தி வைக்கும் முடிவு எதிர்காலத்தில் வடகொரியாவின் முன்னேற்றங்களை பொறுத்து மறுசீரமைக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், வடகொரியா தனது அணுசக்தி ஒப்பந்ததை மீறி செயல்பட்டால் தென்கொரிய ராணுவத்தினர் திருப்பி அழைத்து கொள்ளப்படுவார்கள் என காங் கூறினார்

கிம் முதல் முறையாக சீனாவிற்கு செல்லவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை சென்றுள்ளார். சிங்கப்பூர் உச்சிமாநாட்டை தொடர்ந்து கிம் சீனாவிற்கு சென்றதற்கு நேர்மறையான கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம் சீனா சென்ற கிம் இருநாட்டு இருநாட்டு வளர்ச்சிக்காக ஒப்பந்தம் செய்தார். இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு வளர்வதற்கு ஜி தயாராக இருப்பதாக கிம் தெரிவித்துள்ளார்.