சென்னை:

தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை தீவிரமாக கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை சேகரித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை சேகரித்து வைப்பதையும், விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான பொறுப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், மாவட்ட எஸ்பிகளுக்கும் உள்ளது.
பதற்றமான மதுபானக் கடைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

2019 மார்ச் 1-ம் தேதி வரை 50% விற்பனையோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டைவிட இருப்பு அதிகம் இருக்கும் கடைகளையும் கண்காணிக்க வேண்டும்.

குடிசைப் பகுதி அல்லது குடிசைக்கு அருகிலோ உள்ள மதுபானக் கடைகளை கண்காணிக்க வேண்டும்.
முக்கிய சாலைகளுக்கு தள்ளியே மதுபானக் கடைகள் இருக்க வேண்டும்.

துணை ஆணையர் (ஆயத்தீர்வை), உதவி ஆணையர் (ஆயத்தீர்வை) ஆகியோர் தினமும் 30 சதவீதத்துக்கும் அதிகமாகவோ மது விற்பனை இருந்தால், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.