சென்னை:

மீண்டும் வருவேன்.. எனது பேச்சை அங்கு வந்து கேளுங்கள் என்றும் விஜயகாந்த் பேசும் சிறு பேட்டி ஒன்றை  தேமுதிக தனது  டிவிட்டர் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சை  மேற்கொண்டு வருகிறார். அவர் பிரசாரத்திற்கு வருவார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், தனது குரல் தேறி வருவதை உறுதி செய்யும் வகையில், அவர் கர்ஜிக்கும் பேட்டி ஒன்றை தேமுதிக  வெளியிட்டு உள்ளது.

அதில்,  தேமுதிகவினர் நன்றாக உழைத்து, 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போர் இது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த்  பேட்டி…

கேள்வி: எப்படி இருக்கீங்க கேப்டன்?

பதில்: நல்லா இருக்கேன் சார்.

கேள்வி: உடல்நிலை எப்படி இருக்கு கேப்டன்?

பதில்: உடல்நிலை நல்லாவே இருக்கு.

கேள்வி: அமெரிக்கா போய்ட்டு வந்த அப்புறம் எந்தளவுக்கு தேறி இருக்கீங்க?

பதில்: நல்லா இருக்கேன்.

கேள்வி:  எப்போது தேர்தல் பிரசாரத்துக்கு வந்து பேசுவீங்க. என்ன பேசுவீங்க?

பதில்: விரைவில் வருவேன். என்ன பேசுவேன்னு அங்க வந்து கேட்கச் சொல்லுங்க. 

கேள்வி: அப்ப தொடர்ச்சியா பிரசாரம் பண்ணுவீங்களா?

பதில்: இல்லை, அதை டாக்டர் கிட்ட கேட்டுதானே சொல்ல முடியும்.

கேள்வி: அதிமுக – தேமுதி கூட்டணி எப்படி இருக்கு கேப்டன்?

பதில்: அண்ணா திமுக கூட்டணி ஜெயிக்கும். திமுக கூட்டணி தோற்கும். 

கேள்வி: ஏன் திமுக கூட்டணி தோற்கும்னு சொல்றீங்க?

பதில்: திமுக தில்லு முல்லு கட்சி.

கேள்வி: திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையிலான போட்டி எப்படி இருக்கு கேப்டன்?

ப: தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற போட்டி அது.

கேள்வி: அதில் நிச்சயமா அதிமுக- தேமுதிக கூட்டணி வெற்றி பெறுமா?

பதில்: தர்மம் தான் ஜெயிக்கும். 

கேள்வி: பிரதமர் மோடியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: பிரதமர் மோடி நல்லவர். மீண்டும் அவர் ஆட்சிக்கு வர வேண்டும்.

கேள்வி: தேமுதிக தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

பதில்: நல்லா உழைக்க வேண்டும். 40-ம் ஜெயிக்க வேண்டும்.  என்று கட்டை விரலை காட்டி அவர் பேசி உள்ளார்.

இந்த பேட்டி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…