என்ஆர்சி பற்றி உரிய சட்ட வழிகள், மாநிலங்களுடன் ஆலோசனை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

டெல்லி: என்ஆர்சி தொடர்பான உரிய சட்ட ஆலோசனை மற்றும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்ச் ரவி சங்கர் பிரசாத் கூறி இருக்கிறார்.

என்ஆர்சி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு: இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு முடிவை எடுக்கத்தான் வேண்டும். அதற்கென்று ஒரு சட்ட நடைமுறை உள்ளது.

முதலில் ஒரு முடிவு, இரண்டாவது அதை அறிவிப்பது, பிறகு நடைமுறைப்படுத்துவது, அதனை சரிபார்ப்பது, ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்பது, அப்படி இருந்தால் அதை கேட்பது, மேல்முறையீட்டை ஏற்பது, ஆகியவையாகும்.

அதன் பிறகு, மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து, கருத்துகள் பெறப்படும். எது செய்வதாக இருந்தால் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படும். என்ஆர்சியில் எந்த ரகசியமும் இருக்காது.

ஆனால் அசாமில் என்ஆர்சி அமல்படுத்தப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியாகும். இதே சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், 2010ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இது வெளிப்படையானது என்று கூறினார்.

பெற்றோர்கள் விவரங்கள், அவர்கள் எங்கு பிறந்தனர் என்பது பற்றிய தரவுகள் பயன்படுத்துமா என்று கேட்டதற்கு, முழு சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்றார்.

இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் ஒரு குடிமகனாக இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் வாக்களிக்க முடியும். அதுபோல தான் இதுவும். இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.

இதுபோன்று தான் பாஸ்போர்ட், பான்கார்டு போன்ற விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. என்ஆர்சி என்பது சிஏஏவை விட மாறுபட்டது. அது மக்களுடன் தொடர்புடையது. அதனால் இஸ்லாமியர்கள் அஞ்ச வேண்டிய தேவை இல்லை.

பாக். வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் பார்சிக்களுக்கு மட்டுமே சிஏஏ உள்ளது. இந்த சிஏஏ எந்த ஒரு இந்தியருக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், எதிர்கருத்துகளை மதிக்கும் அரசு பிரதமர் மோ தலைமையிலான அரசு என்றார். அந்த உரிமையை நாங்கள் மதிக்கிறோம், அரசை விமர்சிக்க அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.

அதற்காக பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் இந்த அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

 

கார்ட்டூன் கேலரி