‘’ராமருக்குக் கோயில் கட்டினால் கொரோனா ஒழிந்து போய்விடுமா?’’

‘’ராமருக்குக் கோயில் கட்டினால் கொரோனா ஒழிந்து போய்விடுமா?’’
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இந்த அறக்கட்டளை பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது  குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் சோலாப்பூரில் நேற்று செய்தியாளர்கள் வினா  எழுப்பினார்.
அதற்கு ‘’ அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் கொரோனா வைரஸ் ஒழிந்து விடுமா?’’ எனக் கேள்வி எழுப்பிய சரத்பவார்’’ மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கே அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் மக்களவை உறுப்பினரான அரவிந்த் சாவந்த்’’ ராமபிரான் எங்கள் கட்சியின்  நம்பிக்கை. இதனை அரசியலில் கலக்க வேண்டாம்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
‘’முதல்-அமைச்சர் உத்தவ்தாக்கரே , பதவி ஏற்பதற்கும் முன்னரும்,பின்பும் அயோத்திக்குச் சென்று வந்ததாகக் குறிப்பிட்ட  அரவிந்த் ,ராம மந்திர் இயக்கத்தில் தங்கள் கட்சி முதல் வரிசையில் நின்றதைச் சுட்டிக்காட்டினார்..
-பா.பாரதி