வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

அவர் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து உயிர்வாழலாம். ஆனால், அரசியல் ரீதியாக அவரால் உயிர்பிழைக்க முடியாது என்று நயமாக கூறப்பட்டுள்ளது.

இந்தாண்டு நவம்பர் 7ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் டிரம்ப். தேர்தலுக்கு 7 மாதங்களுக்கு முன்னரே, தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிப்பது சரியானதாக இருக்காது.

ஆனால், தேர்தல் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகள், கடன் தள்ளுபடிகள், வட்டி விகிதங்கள் உள்ளிட்ட பலவித சம்பிரதாய வியூகங்களை அது மோசமாக பாதிக்கும். இதனால், பதவியில் இருக்கும் டிரம்ப்பிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கான டிரம்ப்பின் முன்னேற்பாடுகளை இந்த வைரஸ் தாக்குதல் பாதிக்கும் பட்சத்தில், அவர் தேர்தலில் வெற்றியடைவது மிகக் கடினமான விஷயமாக ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த டொனால்ட் டிரம்ப் என்னவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், எப்படி சிறப்பான செயல்படுகிறார் என்பதையெல்லாம் தாண்டி, அவரின் அதிபர் தேர்தல் தயாரிப்புகளை இந்த வைரஸ் மோசமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.