அலங்காநல்லூரில் 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு!: சீமான் அறிவிப்பு

அலங்காநல்லூரில் வரும் 21ஆம் தேதி தடையை மீறி  ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய கோரி தமிழகம் முழுவதும் தொடங்கிய போராட்டம், தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணப்பாளர் சீமான் “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் தமிழக மக்களின் போராட்டத்தை ஒடுக்குவது சர்வாதிகாரம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையில் இருந்து மத்திய மாநில அரசுகள்  விலகி நிற்கின்றன. ஜல்லிக்கட்டு தடை என்பது தமிழ்ப் பண்பாட்டு மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரும் போராகும். எத்தகைய தடை வந்தாலும், வருகிற 21ம் தேதி,   அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவோம்” என்று  தெரிவித்துள்ளார்.

..