சென்னை.

லைமை செயலகத்தில்  துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றுமி  அனைத்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து, முதல்வர் எடப்பாடியை மாற்றக்கோரி கடிதம் கொடுத்திருந்தனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர்கள் தெரிவித்த விளக்கம் போதாது என இன்று மாலைக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

ஆனால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் யாரும் சபாநாயகரை சந்திக்க முடியாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என தெரிகிறது. அவர்களை பதவி நீக்கம் செய்ய சபாநாயகர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அமைச்சர்க ளுடன் முதல்வர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.