ஃபனி புயல்….. பனி போல கரையுமா? என்ன சொல்கிறது வானிலை மையம் தகவல்

சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை தீவிர புயலாக மாறும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே வேளையில், இந்த புயல் காரணமாக  ஏப்.30 மற்றும் மே 1-ம் தேதிகளில் வட தமிழகத்தில் மிதமான மழையே பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, ஃபனி புயல் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறி வருகிறது. இதன் காரணமாக  27 ந்தேதி முதல் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் மழையுடன் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்து.மேலும் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கும் நாளான 30ந்தேதி மற்றும் ஏப்ரல் 1ந்தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது ஃபனி பயுல் சென்னைக்கு கிழக்கே  1,150 கிமீ தூரத்தில் இருப்பதாகவும், இது தற்போது மணிக்கு  15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இந்த புயல் 30ம் தேதி மாலை தீவிர புயலாக வட தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து தமிழக துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை அறிக்கையை பார்க்கும்போது, ஃபனி புயல் தமிழகத்த விட்டு சற்று விலகி செல்வதாகவே தெரிகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.

இருந்தாலும், இயற்கையின் சீற்றத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே நலம்.

ஃபனி புயல் குறித்து,  கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், “தற்போது வர இருக்கும் புயல் மிகவும் தீவிரமடைந்து எந்த பகுதிக்கு செல்கிறதோ அங்கு ஏராளமான மழையை கொடுக்கும். தமிழகத்தில் கரையை கடந்தால் வறட்சி போய், பின்னர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும், ஆனால், அதை கணிக்க மேலும் அவகாசம் தேவை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Fany Storm, weather center information
-=-