கேப்டவுன்: கொரோனா பாதிப்பிலிருந்து கிரிக்கெட்டை பழைய நிலைக்கு மீட்க வேண்டுமானால், பிசிசிஐ தலைவர் கங்குலியை, ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்.
இந்நிலையில், ஐசிசி தலைவராக கங்குலி பதவியேற்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தை இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு இயக்குநராக உள்ள ஸ்மித்தும் வழிமொழிந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “கொரோனாவுக்குப் பிந்தைய சூழல், கிரிக்கெட்டிற்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். எனவே, அத்தகைய தருணத்தில் கிரிகெட்டை மீட்டெடுத்து முந்தைய வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல ஐசிசி அமைப்புக்கு ஒரு நல்ல தலைமை என்பது முக்கியம்.
அந்த தலைவர் நவீன கிரிக்கெட்டையும் அறிந்தவராக இருக்க வேண்டும் மற்றும் சிறந்த தலைமைப் பண்பும் அவசியம். எனவே, கங்குலிப் போன்றவர்கள் இப்பதவிக்கு மிகவும் சரியானவர்களாய் இருப்பார்கள். அவர் நம்பகத்தன்மை உள்ளவரும்கூட.
ஐசிசி தேர்தலில் வேறு சிலரும் போட்டியில் இருக்கலாம். ஆனால், நவீன கருத்துக்கொண்ட ஒருவர் அப்பதவியில் அமர்வதுதான் சிறந்தது” என்றுள்ளார்.
தற்போதைய ஐசிசி தலைவராக இருப்பவர் இந்தியாவின் சஷாங்க் மனோகர். அவரின் பதவிகாலம் மே மாதத்துடன் முடியும் நிலையில், மறுபடியும் பதவியில் தொடர்வதற்கு விருப்பமில்லை என்று அவர் கூறிவிட்டார் என்பது குறிப்பித்தக்கது.