கவுதம் காம்பீர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுமா? முரண்பட்ட தகவல்களால் நிறுத்தி வைப்பு

 

டில்லி:

மீபத்தில் பாரதியஜனதா கட்சியில் இணைந்த  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு  டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முரண்பட்ட தககவல்களால், அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 3கட்ட கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கு 6வது கட்ட தேர்தலான மே 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

டெல்லி  கிழக்கு டெல்லி தொகுதியில்  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் சொந்த விவரங்கள் குறித்து 2 அபிடவிட்களும்  தாக்கல் செய்துள்ளார். அங்கு இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள அபிடவிட் முத்திரை தாளில், ஏப்ரல் 23ந்தேதி என்று  உள்ளது. ஆனால், அதில் கையொப்பமிட்டுள்ள நோட்டரி கையெழுத்தில் ஏப்ரல் 18ந்தேதி மற்றும் 19ந்தேதி  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 23ந்தேதி வாங்கிய முத்திரைத்தாளில், ஏப்ரல் 18ந்தேதி எப்படி கையெழுத்து போட முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாக, அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று ஆம்ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கவுதம் கம்பீரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர், உடடினயாக இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர் கூறி உள்ளார். இதன் காரணமாக, டில்லி பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது வேட்புமனு ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.