ஒரு நாளில் ரூ.52 கோடி பரிவர்த்தனை – நாடு முழுவதும் பரவலாகும் பாஸ்டேக்?

புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் பணமில்லா கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறையால் ஒருநாளில் ரூ.52 கோடிக்கும் அதிகமாக பரிமாற்றம் நடைபெறுவதால், அதை நாடு முழுவதும் அமல்செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஸ்டேக் முறையால் ஒரு நாளில் 30 லட்சம் எண்ணிக்கையில் பரிமாற்றம் நடைபெறுகிறதாம் மற்றும் ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்டேக் விநியோகம் செய்யப்பட்டும் வருகிறதாம்.

எனவே, இத்திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக அமல்செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். சுங்கச்சாவடிகள் தவிர்த்து, பெட்ரோல் பங்குகளிலும் பாஸ்டேக் அட்டைகள் விற்பனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாஸ்டேக் நடைமுறையை நவீனப்படுத்தவும் மத்திய அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலவிதங்களிலும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடிவடிக்கை எடுத்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.