சென்னை:

பிஎஸ் உள்பட 11 பேரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் முடிவெடுக்க கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது உச்சநீதி மன்றம்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட  11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி சார்பில் தொடரப்பபட்ட வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமைநீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு,சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதற்கான காலக்கெடுவும் கொடுக்க முடியாது,  சபாநாயகர் விரைவில் முட எடுப்பார் என நம்புவதாகவும் என கூறி  வழக்கை  முடித்து வைத்துள்ளது,

உச்சநீதி மன்றத்தில் இன்றைய தீர்ப்பு, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் தலைமீது தொங்கிய கத்தி அகற்றப்பட்டு, அவர்களது பதவி தப்பித்து உள்ளது.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.