ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கும் முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

துவக்க வீரர் ராகுல் 38 ரன்களும், அகர்வால் 16 ரன்களும் அடிக்க, புஜாராவும் 25 ரன்களில் நடையைக் கட்டினார். இதன்பிறகு, கேப்டன் கோலியும் ரஹானேவும் இணைந்து நங்கூரமிட்டனர்.

கோலி 51 ரன்களும், ரஹானே 53 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இப்போட்டியில் இந்த இருவரும் சதமடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோலி இப்போட்டியில் சதமடித்தால், அது அவரின் 26வது டெஸ்ட் சதமாக அமையும்.

தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளைவிட மொத்தம் 260 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் சார்பில் மொத்தம் 7 பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரோஸ்டன் சேஸுக்கு மட்டும் 2 விக்கெட்டுகள் கிடைத்தன. ரோச் 1 விக்கெட் கைப்பற்றினார்.