முதலாவது டெஸ்ட்டை டிரா செய்யுமா இந்திய அணி?

ஆக்லாந்து: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்து தத்தளித்து வருகிறது.

நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தற்போதைய நிலையில், இந்திய அணி,

நியூசிலாந்தைவிட 39 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆட்டத்தை டிரா செய்வதற்கு இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து 300 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியின் பவுலர்கள் ஜேமிசனும், டிரென்ட் போல்ட்டும் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தி விட்டார்கள்.

பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி மீண்டும் சொதப்பியது. மயங்க் அகர்வால் மட்டுமே 58 ரன்களை அடித்தார். கேப்டன் கோலியின் மோசமான ஃபார்மிங் தொடர்கிறது. அவர் 19 ரன்களுக்கு அவுட்டானார்.

புஜாரா இந்தமுறையும் 11 ரன்களை மட்டுமே எடுத்தார். தற்போது ரகானேவும், ஹனுமன் விகாரியும் தற்போது களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் நிலைத்து ஆடுவதில்தான் இந்திய அணி இப்போட்டியை டிரா செய்யுமா? அல்லது இழக்குமா? என்பது தெரியவரும்.