ஆக்லாந்தில் இரண்டாவது டி20 – மீண்டும் பட்டையைக் கிளப்புமா இந்தியா..?

ஆக்லாந்து: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

முதல் போட்டியில் அதிரடியாக வென்ற இந்திய அணி, இன்றும் அதே உத்வேகத்துடன் மோதும் என்று நம்பப்படுகிறது.

இந்திய அணியில் ஷர்துல் தாகுருக்குப் பதில் நவ்தீப் சைனி களமிறங்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காத்திருக்கும் சாதனைகள்

* இன்றைய போட்டியில் விராத் கோலி 36 ரன்கள் எடுத்தால், டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்தியக் கேப்டன்கள் வரிசையில் மகேந்திரசிங் தோனியை முந்தி முதலிடம் பெறுவார். தோனி எடுத்துள்ளது 1112 ரன்கள். கோலி இதுவரை 1077 ரன்களை எடுத்துள்ளார்.

*ரோகித் ஷர்மா இன்று 56 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், துவக்க வீரர் என்ற வகையில் 10000 ரன்கள் என்ற சாதனையை எட்டுவார்.

இந்த மைதானத்தில், இந்திய அணி இதுவரை மோதிய இரண்டு டி-20 போட்டிகளிலும் வென்றுள்ளது.