லிஸ்பன்: இந்தாண்டில் நடக்கவுள்ள டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான டேபிள் டென்னிஸ் போட்டி ‘சுற்று – 16’ இல் இந்திய ஆண்கள் & பெண்கள் அணிகள் தோல்வியடைந்தன.

வரும் ஜுலை 24ம் தேதி தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக். இதில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தகுதிபெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகின்றன.

இதில், இந்திய ஆண்கள் அணி, ‘சுற்று – 16’ இல், இரட்டையர் பிரிவில் வென்ற இந்திய ஆண்கள் அணியினர், அடுத்து நடைபெற்ற 3 ஒற்றையர் போட்டிகளிலும் தோற்றனர். சத்யன், சரத் கமல் மற்றும் ஹர்மீத் உள்ளிட்ட வீரர்கள் இந்தியா சார்பாக இதில் கலந்துகொண்டனர்.

பெண்கள் பிரிவிலும் ‘சுற்று – 16’ இல் இந்தியாவின் சுசித்ரா, ஆய்கா முகர்ஜி மற்றும் மணிகா பத்ரா உள்ளிட்ட வீராங்கனைகள் தோல்வியடைந்தனர்.

அதேசமயம், இந்த தோல்விகளால் இந்தியாவின் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வாய்ப்பு பறிபோய்விடவில்லை. இதில் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் மீண்டும் வாய்ப்பினை பெறுவதற்கு வழியுள்ளது.