இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் திருமணம்!?

சென்னை,

ணிப்பூர் இரும்பு பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் வரும் ஜூலை மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்துக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்க வலியுறுத்தி 16 ஆண்டுகளாக போராடியவர் இரோம் சர்மமிளா. மணிப்பூரில் 2000ஆம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர், கடந்த ஆண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராக அவர் களமிறங்கினார். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்ப வில்லை போலும்.  அவர் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் சவுபால் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

அதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி மற்ற மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இதற்கிடையில், இங்கிலாந்தில் வசிக்கும் சர்மிளாவின்  நீண்ட கால நண்பரான டெஸ்மாண்ட் கவுடின்ஹோ என்பவரை ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருமணம் கேரளாவில்  நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நடக்கவுள்ளதாக இரோம் சர்மிளா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது உண்மையா… அவர் திருமணம் செய்து பல்லாண்டு வாழ பத்திரிகை.காம் தனது முதல் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறது.

கார்ட்டூன் கேலரி