கருணாஸ் கைது செய்யப்படுவாரா? 6 பிரிவுகளில் வழக்கு பதிந்த காவல்துறை

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் அமைச்சர்கள், காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் அவர்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருணாஸ் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் உலா வருகின்றன.

கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய கருணாஸ் தமிழக முதல்வர் மற்றும் அரசு குறித்தும, திநகர் துணை கமிஷனர் அரவிந்த் மற்றும் காவல்துறையினர் பற்றியும்  கடுமையாக விமர்சனம் செய்தார்.

கருணாசின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர்மீது நுங்கம் பாக்கம் காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கருணாஸ் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.