திருமணத்தை மீறிய பாலியல் உறவு:  உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு

--

திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.

 

 

திருமணமான பெண்ணும், திருமணமான வேறொரு ஆணும் (பரஸ்பர விருப்பத்துடன் ) பாலியல் உறவு வைத்திருந்தால், ஆணை மட்டுமே தண்டிக்க சட்டப்பிரிவு 497 வழி செய்கிறது. இந்தச் சட்டத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.  விசாரணையின் போது இந்த சட்டப்பிரிவு பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடை கொண்டிருப்பது போல் தோற்றமளித்தாலும், ஆணாதிக்க நிலைக்கே வழி வகுப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க இருக்கிறது.