சென்னை: மோடி தனது அன்பு நண்பரை கவுரவிக்க மீண்டுமொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவர்  ப.சிதம்பரம்  கேள்வி எபப்பி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அங்கு தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்கும், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையே நேரடி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவில், 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க அமெரிக்க அரசு தவறிவிட்டது. அமெரிக்கர் இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்டு டிரம்ப் என குற்றசாட்டியுள்ளார்

இந் ஜோ பிடனின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அதிபர் டிரம்ப்,  “நீங்கள் எண்களைப் பற்றி பேசும்போது, சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ரஷ்யாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இந்தியாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.  இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றும், புவி வெப்பமயமாதலுக்கு இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

டிரம்பின் குற்றச்சாட்டு, இந்திய அரசியலில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள் தனது டிவீட்டர் பக்கத்தில் மோடி அரசுக்கு சில கேள்விகளை தனத டிவிட்டர் எழுப்பி உள்ளார். அதில்,

திரு டொனால்ட் டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைத்து, மூன்று நாடுகளும் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கையை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்

மூன்று நாடுகளும் அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திரு மோடி தனது அன்பு நண்பரை கவுரவிப்பதற்காக மற்றொரு ‘நமஸ்தே டிரம்ப்!’ பேரணியை நடத்துவாரா?

என கேள்வி எழுப்பி உள்ளார்.