தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? இல்லை இதுவும் வதந்தியா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.