வெறுப்பின் அரசியலுக்கு தலைவணங்க மாட்டேன்: கிறிஸ்துமஸ் விழாவில் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 15ம் தேதியன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு  நடந்த விழாவில்,  தனது வாழ்க்கையையே சரணடையத் தயாராக உள்ளதாகவும்,  ஆனால் “வெறுப்பின் அரசியலுக்கு” ஒருபோதும் தலைவணங்க மாட்டார் என்று கூறினார்.

மேலும், அவர் இந்திய நாடு ஒவ்வொரு சமூகத்திற்கும் சொந்தமானது என்றும் மக்களுக்குத் தம் சொந்த விருப்பத்தின் பேரில் எந்தவொரு மதத்தையோ, கொள்கையையோ பின்பற்ற அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.

“நான் என் வாழ்க்கையை சரணடைய தயாராக இருக்கிறேன், ஆனால் வெறுப்பு அரசியலுக்கு தலை வணங்க மாட்டேன்” என்று முதல்வர் கூறினார், அனைத்து சமூகங்களைச் சார்ந்த மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க எல்லாவற்றையும் செய்வேன் என்று வலியுறுத்தினார்.

கிறிஸ்துமஸ் என்பது நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை பரப்பும் ஒரு பண்டிகை என்று கூறிய பானர்ஜி, தான் அனைத்து சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் அதேவேளையில், “வெறுப்பு அரசியலை ஆதரிப்பவர்களின் கட்டளைகளுக்கு சரணடைய தான் தயாராக இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.