சிட்னி:
 
ந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட டேவிட் வார்னருக்கு  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ தடை விதித்துள்ள நிலையில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்து சேதப்படுத்திய குற்றத்தற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட நிலையில்,  இனிமேல் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடப் போவதில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதுடன் ஓராண்டு தடையும், கேமரூன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

இதை அடுத்து நாடு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித், ரசிகர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியா திரும்பினார்.

சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டு மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக கூறியதுடன், இதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கண்ணீர் சிந்தினார்.

தவறான முடிவை எடுத்து நாட்டை தரம் தாழ்த்தி விட்டதாக கூறிய வார்னர், மீண்டும் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கான வழியை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என்றும் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்கலாமா என்பது குறித்து தனது   குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.