இந்திய அரசு கூறினால் உலகக் கோப்பை தொடரையே புறக்கணிக்க தயாராக இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Ravi_Shastri

கடந்த 14ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானிற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பொருளாதாரம் ரீதியாகவும், ராணுவம் கொண்டும் பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணி விளையாடக் கூடாது என பலமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. முன்னாள் இந்திய கிரிகெட் வீரர்களும் பாகிஸ்தானிற்கு எதிராக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, ”பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியமும், மத்தியன் அரசும் தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசின் கருத்துக்களுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். உலகக் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று மத்திய அரசு கூறினாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என கூறியுள்ளார்.