மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும்; வன்முறையை பொறுத்துக்கொள்ள மாட்டேன்! மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும், வன்முறையை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேதிலில் 213 தொகுதிகளில் வெற்றிபெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து,  மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இன்று பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், அவர் மட்டுமே இன்று பதவி ஏற்றார். அமைச்சரவை விரைவில் பதவி ஏற்கும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க,மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டச்சார்ஜி,எதிர்க்கட்சி தலைவரான அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பீமன் போஸ்,திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி,தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி  உள்பட குறைந்த அளவிலான முக்கியஸ்தகர்கள் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்றபிறகு செய்தியளார்களை சந்தித்த மம்தா,  கடந்த 3 மாதங்களாக காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கீழ் இருந்தது. நான் இப்போது பதவியேற்றுள்ளேன், இங்கே சட்டம் மற்றும் நிலைமையை கவனித்துக்கொள்வேன். மாநிலத்தில் எந்த வன்முறையையும் முட்டாள்தனத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். எங்களுக்கு அமைதி வேண்டும் என தெரிவித்துள்ளார்.