நியாய் திட்ட அறிவிப்பால் சத்தீஷ்கரில் செல்வாக்குப் பெறும் காங்கிரஸ்!

ராய்ப்பூர்: காங்கிரஸ் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியான நியாய் திட்டம், சத்தீஷ்கர் மாநிலத்தில் அக்கட்சிக்கு பெரிய வெற்றியை பெற்றுதரும் என்று கூறப்படுகிறது.

நியாய் திட்டத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறப்பாக அமல்படுத்துவோம் என்ற மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பகலின் வாக்குறுதி மக்களைக் கவர்ந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

காங்கிரசின் இந்தப் பிரச்சார உத்தியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது பாரதீய ஜனதா. அக்கட்சியினர் தாங்கள் இழக்கப்போகும் வாக்குகளை எப்படி தக்கவைப்பது என்று திணறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

– மதுரை மாயாண்டி