டோக்கியோ: கொரோனா தாக்கம் குறையாமல் தொடர்ந்து நீடித்தால், ஒலிம்பிக் போட்டி மீண்டுமொருமுறை தள்ளி வைக்கப்படாது எனவும், அதற்கு பதிலாக, ரத்துசெய்யப்பட்டுவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு ஜுலை மாதம், ஜப்பானின் டோக்கியோவில் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், ‍கொரோனா பரவல் காரணமாக அடுத்த 2021ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே ரூ.92000 கோடி செலவிடப்பட்ட நிலையில், அடுத்தாண்டு நடத்தப்படுகையில் கூடுதலாக ரூ.46000 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

எனவே, வரும் நாட்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், போட்டி மீண்டும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பில்லை எனவும், ஒரேடியாக ரத்து செய்யப்படும் என்றும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஒலிம்பிக் போட்டி ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போர் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.