விலையிறங்குவாயா வெங்காயமே? கமல் டிவிட்…

சென்னை: விலையிறங்குவாயா வெங்காயமே?- என கமல் டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது.  வடமாநிலங்களில் பெய்து வந்த மழை காரணமாக நடப்பாண்டு போதிய வெங்காய விளைச்சல் இல்லாத காரணத்தால், வெங்காய வரத்து தடை பட்டுள்ளது. இதனால்,  தமிழகத்தில் வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இதையடுத்து, தமிழகஅரசு, வெங்காயத்தை வாங்கி கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் எகிப்து உள்பட பல வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை வியாபாரிகள் இறக்குமதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்காயம் விலை குறித்து மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவரான நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

விலையிறங்குவாயா வெங்காயமே?- கமல்;

விண்ணில் பறக்கும் வெங்காய விலையை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார், விலையிறங்குவாயா வெங்காயமே?  என தெரிவித்துள்ளார்.