புதுடெல்லி: மனு கொடுப்பதெல்லாம் கதைக்கு ஆகாது எனவும், மோடி அரசை வழிக்குக் கொண்டுவர வேண்டுமெனில் வீதிகளில் இறங்கிப் போராட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆலோசனைக் கூறியுள்ளார்.
இவர் கடந்த பல ஆண்டுகளாகவே, மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சித்தாந்தம் சார்ந்த அட்டூழியங்களை எதிர்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 22 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்றதையடுத்து, யஷ்வந்த் சின்ஹா கூறியிருப்பதாவது, “மத்திய அரசு, ஏழைகள் அனுபவிக்கின்ற கடும் துயரத்தை காணாமலும், அவர்களது ஓலத்தை கேட்காமலும் அசட்டை செய்கிறது.
இந்நிலையில், வெறுமனே மனு கொடுப்பதும், அறிக்கை வெளியிடுவதும் வேலைக்கு ஆகாது. எதிர்கட்சிகள், வீதிகளில் இறங்கிப் போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.