டில்லி

னைவிக்கும் மகளுக்கும் தரவேண்டிய ஜீவனாம்ச தொகையை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து குறைந்த பட்ச ஊதியம் கிடைத்ததும் அளிப்பதாக ஒரு நடிகர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படும் என்னும்  திட்டத்தை அறிவித்தது. அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.6000 மாத ஊதியம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதி மக்களிடையே குறிப்பாக ஏழை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பல பொருளாதார நிபுணர்களும் இது சாத்தியமானது என அறிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி நடிகரான ஆனந்த் சர்மா என்னும் 38 வயதுள்ள நபர் தனது மனைவியையும் 12 வயது மகளையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி இவர் மீது உள்ளூர் குடும்ப நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நடிகர் தனது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் ரூ.4500 ஜீவனாம்ச தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பானது. இதை ஒட்டி ஆனந்த் சர்மா மனு ஒன்றை நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

குடும்ப நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், “நான் தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறேன். எனக்கு மாத வருமானம் ரூ.5000 – 6000 கிடைக்கிறது. இந்த பணத்தில் நான் என் பெற்றோரையும் பராமரிக்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.6000 குறைந்த பட்ச ஊதியம் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வரை இந்த தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் எனக்களிக்கும் ஓய்வூதியமான ரு.6000 ல் இருந்து நேரடியாக எனது மனைவி மற்றும் மகளுக்கு ரூ. 4500 அளித்து விட்டு மீதமுள்ள தொகையை எனக்கு அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தெதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.