திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடுவோம் : குஷ்பு வீடியோ

முட்டுக்காடு

டிகை குஷ்பு திருமாவளவனை எதிர்த்து கடைசி மூச்சு வரை போராடப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்

மனுஸ்மிருதியை குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன் தனது கருத்தில் பெண்களை இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் சிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ளச் சிதம்பரம் சென்று கொண்டு இருந்த குஷ்பு வழியில் முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார்.

இது குறித்து வெளியிட்டுள்ள காணொளியில் திருமாவளவன் பெண்களுக்கு எதிராகப் பேசியதால் தாம் போராட்டம் நடத்துவதாகவும் தமது கடைசி மூச்சு வரை போராட உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

வாசகர்களுக்காக அந்த வீடியோ :