தனது தேர்வுக்கு நியாயம் செய்த வில் புகோவ்ஸ்கி – அரைசதம் அடித்தார்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளை வரை, 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

துவக்க வீரராக களமிறங்கியுள்ள புதுமுகம் வில் புகோவ்ஸ்கி, 54 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிவரும் மார்னஸ் லபுஷேன் 34 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.

இந்த டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் ஒருவர் சதமடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், அஸ்வின் மற்றும் சைனி ஆகியோர் பந்து வீசி வருகின்றனர். சிராஜுக்கு மட்டும் வார்னரின் விக்கெட் கிடைத்தது. கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கிடைத்ததைப்போல், இந்தியாவிற்கு இந்தப் போட்டியில் துவக்க விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.