விண்டீஸ் அணியை இறுதி நாளிலும் காப்பாற்றுமா மழை?

லண்டன்: மழை காரணமாக, இங்கிலாந்து – விண்டீஸ் அணிகளின் மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாள் ஆட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மழை 5ம் நாளிலும் குறுக்கிடும் பட்சத்தில், போட்டி டிரா ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெற்றிபெற 399 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய விண்டீஸ் அணி, 3வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. எனவே, இந்தப் போட்டியில் தோற்று, டெஸ்ட் தொடரை இழப்பது உறுதி என்றானது.

ஏற்கனவே, கடந்த 2 போட்டிகளில், இரண்டு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. இது 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாகும். நான்காவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது.

தற்போது, ஒருநாள் ஆட்டம் மட்டுமே பாக்கியுள்ளது. இன்னும் மழை வரும் பட்சத்தில், போட்டி ‘டிரா’ ஆகி, அதன்மூலம் டெஸ்ட தொடர் தோல்வியிலிருந்து விண்டீஸ் அணி அதிர்ஷ்வசமாக தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி மழைவராத பட்சத்தில், தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில், வெஸ்ட் இண்டீஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.

கார்ட்டூன் கேலரி