ரஜினிக்கு அரசியல் ஒத்துவருமா? : இயக்குநர் சேரன் கேள்வி

 

பொய்யே பேச வராத ரஜினிக்கு. அரசியல் ஒத்துவருமா என்று ரஜினியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் திரைப்பட இயக்குனர் சேரன்.

வழக்கம்போல், ரஜினி “ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன்” “வரவேண்டிய நேரத்தில் வருவேன்” என்று குழப்பமாக பேசியிருக்கிறார். ஆனால் இதை வைத்து பெரும் விவாதங்கள் நடந்துவருகின்றன. பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

#Rajinikanthவணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும்.. மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை.
#rajinikanthகளவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே.

#rajinikanthகர்நாடகாவை எதிர்க்கவேண்டும் இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும் மதுக்கடைகள் மூடக்கூடாது.. சவால்கள் நிறைய
#rajinikanthநீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களம்இறங்குங்கள் கலந்துபேசுங்கள் ஏரியாவாரியாக ப்ரச்னைகளை தெரிந்துகொள்ளுங்கள்

– இவ்வாறு சேரன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.