நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க ஆர் எஸ் எஸ் திட்டமா?

டில்லி

ரும் 2019 மக்களவை தேர்தலில் மோடிக்கு பதிலாக நிதின் கட்கரியை பிரத்மர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர் எஸ் எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஆர் எஸ் எஸ் அமைப்பு, பாஜகவின் கட்சி மற்றும் அரசு விவகாரங்களில் நேரடியாக தலையிடுவதில்லை எனினும் ஆலோசனைகள் அளிப்பதும் பாஜக அதை பின்பற்றுவதும் தொடர்ந்து வருகிறது.    சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஆர் எஸ் எஸ் விவசாய அமைப்பின் தலைவர் கிஷோர் திவாரி ஆர் எஸ் எஸ் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் நிதின் கட்கரியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை பாஜக  சந்திக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன அவர் கடிதத்தில் கூறியது போல் பல ஆர் எஸ் எஸ் தலைவர்கள்பாஜக  தலைவர்கள் சிலரின் கர்வத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.   அத்துடன் பாஜகவின் கூட்டணி கட்சிகளும் பாஜக மீது அதிருப்தி அடைந்துள்ளதும் வெளியாகி வருகிறது.     இந்நிலையில் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டுன் என ஆர் எஸ் எஸ் விரும்புவதாக கூறப்படுகிறது.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் பெயர் தெரிவிக்க விரும்பாத தலைவர் ஒருவர், “எங்களால் பிரதமராக்கபட்ட மோடி எங்கள் கருத்தை கண்டுக் கொள்வதில்லை.   அவர் அமித்ஷாவுடன் சேர்ந்து கட்சி மட்டும் அரசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.   இதனால் சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக திரும்பி உள்ளன.  இதனால் மாற்று வேட்பாளர் ஒருவரை பிரதமராக்குவதே கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாக்ப்பூரை சேர்ந்த நிதின் கட்கரி சமீபத்தில் தோல்விக்கு தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என யாரையும் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்துள்ளார்.   அது மட்டுமின்றி வெற்றிக்கு ஆயிரம் தகப்பன்கள் வருகின்றனரே தவிர தோல்வி அனாதையாக உள்ளது எனவும் அவர் கூறி உள்ளது ஆர் எஸ் எஸ் கருத்து என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

நன்றி : கல்ஃப் நியூஸ் இந்தியா

கார்ட்டூன் கேலரி