சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் இணைவாரா?

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் துணை முதல் –அமைச்சராக இருந்தவர், சச்சின் பைலட்.

கட்சிக்குள் கலகம் செய்ததால் துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபையை கூட்டியுள்ள அசோக் கெலாட், நம்பிக்கை வாக்கு கோருவார் என தெரிகிறது.

சச்சினை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வந்த அசோக் கெலாட், இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,’’ காங்கிரசுக்கு எதிராக கலகம் செய்த சச்சின் உள்ளிட்டோர் மேலிடத்தில் மன்னிப்பு கேட்டு, மீண்டும் கட்சியில் சேர்ந்தால் எனக்கு பிரச்சினை இல்லை.’’ என்று கூறினார்.

சச்சினுடன் சமரசத்துக்கு தயாராக இருப்பதை நாசூக்காக குறிப்பிட்டிருந்தார், அசோக் கெலாட்.

அவரது கருத்து குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘’இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் தனது நிலையை முதலில் தெளிவு படுத்த வேண்டும். அதன் பிறகு கட்சியில் அவரை சேர்ப்பது குறித்து பேசுவோம்’’ என ரன்தீப் சுர்ஜிவாலா பதில் அளித்தார்.

 -பா.பாரதி.