சசிகலா நாளை வருகை? சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு!

சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நாளை சசிகலா தனது கணவர் நடராஜனை பார்க்க வருவதாகவும், அதேவேளையில்  அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழு நடைபெற இருக்கிற சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அரசு கொறடாவை நீக்க எம்எல்ஏ. வெற்றிவேல் கோரிக்கை விடுத்த நிலையில் சபாநாயகரு டனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனை யில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவரை பார்ப்பதற்காகவும், அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு நாளை கூடும் நிலையில் சசிகலா பரோலில் வருவார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இன்று காலை தமிழக காவல்துறை தலைவர் மற்றும், சென்னை காவல் ஆணையாளருடன் நாளை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.