சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், தேர்தல்களில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிமுக என்ற ஒரு பெரிய கட்சியை, இன்றைய நிலையில், அனைத்து வகையிலும் ஒருங்கிணைத்துச் செல்லக்கூடிய ஆற்றல் படைத்த நபராக இருப்பவர் சசிகலாதான். அந்தவகையில், சற்று தாமதமாகவேனும் அதிமுக அவரின் தலைமையின் கீழ் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதில், அவரின் ஆதரவாளர்கள் பெரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எனவே, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு, சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் தமாங்கைப் போன்ற விதிவிலக்கு சலுகையைப் பெறலாமா? என்ற திட்டமும் அவர்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமாங் ஓராண்டு தண்டனைப் பெற்றவர் மற்றும் சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர் என்ற வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், இதற்கு பாஜக மனது வைக்க வேண்டுமென்ற ஒரு கசப்பான உண்மை வெளிப்படையாக இருக்கிறது.

சிக்கிம் மாநிலத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலேயே அந்த சலுகையைப் பெற்றார் தமாங். எனவே, சசிகலாவும் பாஜக விரும்பியதை செய்யத் தயாராக இருந்தால், அவருக்கான அனுகூலத்தை செய்வதற்கு பாஜக தயாராகும். எனவே, இதெல்லாம் நடக்குமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஒருவேளை, அந்த சலுகை குறித்து கவலைப்படாமல், தன் சார்பாக, தினகரன் போன்றவர்களையும் சசிகலா முன்னிறுத்தக்கூடும்!