சவுதி அரேபியாவின் பொருளாதாரச் சீர்திருத்தம் சாத்தியமாகுமா ?

பல தலைமுறைகளாக, சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. மிகப் பழமை வாய்ந்த ராஜ்யம் அதன் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி தாயகத்திலும் வெளிநாட்டிலும் உள்ள நண்பர்களின் பற்றுறுதியை பெற்றது. ஆனால், கடந்த ஆண்டு ராஜா சல்மான் அரியணை ஏறியப் பின்னர், அவரது 30 வயது மகன், முஹம்மது கொண்டுவந்த மாற்றங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உத்தரவாதமின்மையை கொண்டுவந்துள்ளது.

oil featured

ராஜாவிற்கு அடுத்த அதிகாரத்தில் இருக்கும் பொறுமையற்ற இளவரசரின் சவுதி அரேபியாவின் எதிரியான இரான் மீதான அபாயகரமான அதீத கவனம், வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதாகவும் , இரான் தன் உறவை அமெரிக்காவை  நோக்கி பலப்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்துள்ளது என விமர்சகர்கள்  கூறுகின்றனர்.

எண்ணையை  விட்டு தன்னை விடுவித்துக்கொள்ள தொடங்க வேண்டும் என நினைக்கும் சவுதி அரேபியாவிற்கு மூர்க்கத்தனமான முஹம்மது பின் சல்மான்  செய்வது சரியாகப்படுகின்றது. கடந்த 18 மாதங்களில் எண்ணையின் விலை மிகத் தீவிரமாகக் குறைந்து விட்டது.

நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருக்கும் சவுதியின் எதிர்கால நோக்கு சீர்திருத்த திட்டத்தை, ஏப்ரல் 25 ம் தேதி  இளவரசர் வெளியிடும் போது ஒரு பெரிய சோதனையை அவர் எதிர்கொள்வார் என கணிக்கப் பட்டுள்ளது.

இளவரசரின் ஆளுமையின் கீழ், சவுதி அரேபியா நிச்சயமாக  பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏமன் நாட்டின் மீது ஒரு வருடத்திற்கு முன்பு  படையெடுத்து  சென்று, இப்போது சவுதி மண்ணைக்கவ்வியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், சவுதி ஒரு முக்கிய ஷியா மதகுருவை தூக்கிலிட்டது, ஈரான் நாட்டை எரிச்சலூட்டியுள்ளது. பின்னர், வஹீ இளவரசன்,  நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, உலகின் மிகப் பெரிய நிறுவனம் எனக் கருதப் படும் சவுதி அரம்கோவின் (Aramco) பங்குகளை விற்கத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.

 

ஏப்ரல் 17 அன்று தோகாவில் (Doha), உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணையின் விலையை  உயர்த்த எடுத்த உற்பத்தி நிறுத்த முயற்சிகளை, அன்று அவர் நிலையான  மற்றும் சீரான வெளியீடு நடத்துவதன் மூலம் நிர்மூலமாக்கினார். கடைசி நேர நாடக அரங்கேற்றமாய் , அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலமாக, அவர் மூத்த சவுதிஅரேபிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் அலி அல்-நைமி போன்ற சான்றோர்களின் நம்பகத்தன்மையை வெகுவாய் சிதைத்துவிட்டார்.

ஆயினும், சவூதி பொருளாதாரத்தை  எப்படி மடை மாற்ற வேண்டும் என்பது  குறித்து  இளவரசர் முஹம்மதுவிடம்  சிறப்பான  திட்டங்கள் உள்ளன. உலகின் மிகப் பெரிய எண்ணெய் சக்தி நாடான அரேபியா , தன் அரசாங்க வருமானத்திற்கு  பத்தில் ஒன்பது  பங்கு கச்சா எண்ணையையே நம்பியுள்ளது. கச்சா எண்ணை விலையின்  கடும் வீழ்ச்சி, நாட்டின் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 13.5% பற்றாக்குறையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே அரேபியா தன் செலவினங்களைக் குறைத்து, அதன் இருப்புக்களைக் குறைத்து மற்றும் வெளிநாடுகளில் கடன் வாங்கி ஈடுக்கட்ட வேண்டி யுள்ளது.

எண்ணெய் செழிக்கும் போது கூட அல்-சௌட்ஸ் பின்பற்றும் ரென்டியர் மாடல்  நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளது. மானியங்கள் ஒழிப்பது, புதிய வரிகள் விதிப்பது, பொது சேவைகளில் ஒரு பகுதியில் தனியார்மயப் படுத்துவது மற்றும் மாபெரும் பெட்ரோகெமிக்கல்ஸ் சவுதி அரம்கோ (Aramco) மற்றும் SABIC உள்ளிட்ட நிறுவனங்களில்  தொழில்துறை சீர்திருத்தம்  கொண்டுவருவது உள்ளிட்டவை இளவரசர் முகம்மதுவின் திட்டங்களில் அடங்கும்.

ஆனால் அது பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்தகைய  பெரிய லட்சியத்தை செயல்படுத்த அரசிடம் போதுமான  உள்கட்டமைப்பு இல்லை.  முதலீட்டை ஈர்க்கும் தேவையான தீவிரமான தனியார் துறை ஊக்குவித்தல்,   வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் ஊக்குவித்தல், சட்டத்தின் ஆட்சி நிறுவுதல், மற்றும் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் மேம்பாடு போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்களைத் தடுக்க பரந்த ஆளும் அரசக் குடும்பம் மற்றும் தீவிர பழமைவாத மத குருமார்கள் அதிகாரமே குறுக்கே நிற்கின்றது.

சவுதி அரேபியா சந்தித்து வரும் பின்னடைவுகளில் சில தானே வரவழைத்துக் கொண்டதாகும். 2014 ல் கச்சா எண்ணையின் விலைஉயர்வை அது தேவையில்லாமல் முட்டுக் கொடுத்து நிறுத்தியது. தன் உற்பத்தியை நிறுத்தாமல், தொடர்ந்து எண்ணை தயாரித்து தன் சந்தையை உறுதிப்படுத்திக் கொண்டது. போட்டியிட முடியாத தயாரிப்பாளர்களுக்கு  மானியம் அளிக்க வேண்டும் என்ற அறிஞர்களின் கோரிக்கையை நிராகரித்தது. ஈரானை அபகரிக்கவும் முயற்சி செய்தது. இரானுடன் போட்டிப்போட்டுக் கொண்டு, இரான் நிறுத்தாத வரை, தாங்களும் எண்ணை உற்பத்தியை நிறுத்த மாட்டோம் என சவுதி அறிவித்தது.

 

கடந்த  ஜனவரி மாதம் மேற்கத்திய அணு தொடர்பான தடைகளை நீக்கியதற்குப் பிறகு தன்  எண்ணை உற்பத்தியை  மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எல்லா உரிமையும் தனக்கு உண்டு என ஈரான் நினைக்கின்றது.

 

அமெரிக்க காரணி

 

 

சவுதி அரேபியா சற்றே பின்வாங்குகின்றதென்றால் அதற்கு ஒரே காரணம் அமெரிக்கா தன்னை கைவிட்டு தனிமைப் படுத்தி விடும்  என்கிற பயமே ஆகும். பராக் ஒபாமா, ஈரான் சார்பு நிலைப்பட்டை எடுப்பதாக சவுதி அரேபியா  கருதுகின்றது.  திரு ஒபாமா வளைகுடா நாடுகள் மற்றும் ஏனைய நட்பு நாடுகளை “தான்தோன்றித் தனமாய் செயல்படும் நாடுகள்” என்று குற்றம் சாட்டி, ஈரானுடன் நட்புறவைப் பேணுமாறு அறிவிறுத்தி உள்ளது அச்சத்தை மற்றும் சீர்திருத்தத்திற்கான நெருக்குதலையும்  ஏற்படுத்தி உள்ளது .

சவுதி அரேபியாவிடம் அபரிமிதமான  எண்ணெய் வளம்  இருக்கலாம், ஆனால் ஈரான் மிகவும் பரவலான பொருளாதாரத்தை உடையது ஆகவே கடினமான நிலைமைகளை எப்படி சமாளிப்பது என நன்றாகவே ஈரானுக்குத்  தெரியும்.