சென்னை:
செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று செய்தித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் எப்போது மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை

இந்த ஆண்டு முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களும் ஜனவரி முதல் தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளன

இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்கப்படும் என்ற தகவல்கள் மிக வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இந்த தகவல்களை செய்தித்துறை மறுத்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கும் படம் என்ற தகவல் தவறானது என்றும் செய்தித்துறை விளக்கமளித்துள்ளது

பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்படும் தேதி குறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடும் என்றும் செய்தித்துறை விளக்கம் அளித்துள்ளது