2 முக்கிய வேகங்களும் தென்ஆஃப்ரிக்க அணியில் இணைந்து விடுவார்களா?

டர்பன்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெயின் மற்றும் காகிஸோ ரபாடா இருவரும், உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராகி விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற அவர்களுடைய பயணம், காயம் காரணமாக தடைபட்டது. அப்படியிருந்தும், டெல்லி அணியில் விளையாடிய ரபாடா, 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இரண்டாமிடம் பெற்றார்.

தென்ஆஃப்ரிக்க அணி, உலகக்கோப்பையில், தனது முதல் போட்டியில், போட்டியை நடத்தும் வலுவான இங்கிலாந்து அணியுடன் வரும் மே 30ம் தேதி மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அதற்குள் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களும் தயாராகி அணியில் இடம்பெற்றுவிட வேண்டுமென அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இதுதொடர்பாக எந்தக் கவலையும் தேவையில்லை என்றும், அவர்கள் இருவரும் சரியான நேரத்தில் தயாராகி அணியில் இணைந்து விடுவார்கள் என்றும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-